அலகு 4:இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை
I. சரியான விடையைத் தேர்வு செய்க.
1. எந்த இரு நாடுகளுக்கிடையே பஞ்சசீல ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது?
அ) இந்தியா மற்றும் நேபாளம்
ஆ) இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இ) இந்தியா மற்றும் சீனா
ஈ) இந்தியா மற்றும் ஸ்ரீலங்கா
விடைகுறிப்பு:
இ இந்தியா மற்றும் சீனா
2. இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது?
அ) சட்டப்பிரிவு 50
ஆ) சட்டப்பிரிவு 51
இ) சட்டப்பிரிவு 52
ஈ) சட்டப்பிரிவு 53
விடைகுறிப்பு:
ஆ) சட்டப்பிரிவு 51
3. 1954இல் இந்தியா மற்றும் சீனாவால் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் இது தொடர்பானது.
அ) வியாபாரம் மற்றும் வணிகம்
ஆ) சாதாரண உறவுகளை மீட்டெடுப்பது
இ) கலாச்சார பரிமாற்றங்கள்
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
விடைகுறிப்பு:
ஈ) ஐந்து கொள்கைகளுடன் இணைந்திருத்தல்
4. நமது வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்பு இல்லாதது எது?
அ) உலக ஒத்துழைப்பு
ஆ) உலக அமைதி
இ) இனச் சமத்துவம்
ஈ) காலனித்துவம்
விடைகுறிப்பு:
ஈ) காலனித்துவம்
5. கீழ்க்கண்டவைகளில் அணிசேரா இயக்கத்தில் நிறுவன உறுப்பினர் அல்லாத நாடு எது?
அ) யூகோஸ்லோவியா
ஆ) இந்தோனேசியா
இ) எகிப்து
ஈ) பாகிஸ்தான்
விடைகுறிப்பு:
ஈ) பாகிஸ்தான்
6. அணிசேராமை என்பதன் பொருள்…………
அ) நடுநிலைமை வகிப்பது
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
இ) இராணுவமயமின்மை
ஈ) மேற்கூறியவற்றில் எதுவும் இல்லை
விடைகுறிப்பு:
ஆ) தன்னிச்சையாகப் பிரச்சனைகளுக்கு முடிவு எடுக்கும் சுதந்திரம்
7. இராணுவம் சாராத பிரச்சனைகள் என்பது ……………
அ) ஆற்றல் பாதுகாப்பு
ஆ) நீர் பாதுகாப்பு
இ) தொற்றுநோய்கள்
ஈ) இவை அனைத்தும்
விடைகுறிப்பு:
ஈ) இவை அனைத்தும்
II. கோடிட்டஇடங்களை நிரப்புக.
1. இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம் ………….
2. …………. என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
3. இரு வல்லரசுகளின் பனிப்போரினை எதிர்கொள்ள இந்தியா பின்பற்றிய கொள்கை ……….
விடைகுறிப்பு:
1. பொக்ரான்
2. இராஜதந்திரம்
3. அணி சேராக் கொள்கை
III. பின்வரும் கூற்றினைப் படித்து பொருத்தமான விடையைத்
தேர்ந்தெடுக்கவும்
1. பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடைகுறிப்புயைத் தேர்ந்தெடுக்கவும். i) பஞ்சசீலம்
ii) சீனாவின் அணுவெடிப்புச் சோதனை
iii) 20 ஆண்டுகள் ஒப்பந்தம்
iv) இந்தியாவின் முதல் அணுவெடிப்புச் சோதனை
அ) (i), (iii), (iv), (ii)
ஆ) (i), (ii), (iii), (iv)
இ) (i), (ii), (iv), (iii)
ஈ) (i), (iii), (ii), (iv)
விடைகுறிப்பு:
அ) (i), (iii), (iv), (ii)
2. பின்வருவனவற்றில் அணிசேரா இயக்கத்துடன் தொடர்பு இல்லாதது எது?
i) அணிசேரா இயக்கம் என்ற சொல் வி. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.
ii) இதன் நோக்கம் இராணுவக் கூட்டமைப்பில் சேர்ந்து வெளி விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல் ஆகும்.
iii) தற்போது இது 120 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
v) இது பொருளாதார இயக்கமாக மாற்றமடைந்துள்ளது.அ) (1) மற்றும் (ii)
ஆ) (iii) மற்றும் (iv)
இ) (ii) மட்டும்
ஈ) (iv) மட்டும்
விடைகுறிப்பு:
இ (ii) மட்டும்
3. கூற்று : இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ளது.
காரணம் : உலகின் இரண்டாவது அதிக அளவிலான மக்கள் தொகையைக் கொண்ட நாடு இந்தியா ஆகும்.
அ) கூற்று சரி மற்றும் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறு காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
விடைகுறிப்பு:
ஆ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
V. சுருக்கமாக விடையளிக்கவும்
1. வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன?
விடைகுறிப்பு:
1. ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களில் தனது தேசிய நலனை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்டதே வெளியுறவுக் கொள்கை ஆகும்
2. இது நாட்டு மக்களின் நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரத்தை பாதுகாக்க உதவுகிறது.
2. பஞ்சசீலக் கொள்கைகளில் நான்கினைப் பட்டியடுக
விடைகுறிப்பு:
1. ஒவ்வொரு நாட்டின் எல்லை, இறையாண்மை மீது பரஸ்பர மதிப்பு
2. பரஸ்பர ஆக்கிரமின்மை
3. பரஸ்பர உள்நாட்டு விவகாரத்தில் தலையிடாமை
4. பரஸ்பர நலனுக்கான சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்
5.அமைதியாக சேர்திருத்தல்
3. அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
விடைகுறிப்பு:
1. நேரு -இந்தியா
2. நாசர் - எகிப்த்
3. டிட்டோ - யுகோஸ்லேவியா
4. சுகர்னோ - இந்தோனேசியா
5. நுக்ருமா கானா
4. இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி
விடைகுறிப்பு:
1. அமைதி விரும்பும் நாடான இந்தியா எப்போதும் படைவலிமை குறைப்பை வலியுறுத்தி வருகிறது.
2. முதலில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை
3. ஐ.நாவின் படை வலிமை குறைப்புத் திட்டத்திற்கு இந்தியா ஆதரவு.
4. அணு ஆயுதத்தைப் போர்த் தாக்குதலுக்கு பயன்படுவதில்லை.
5. சார்க் உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக
விடைகுறிப்பு:
1. இந்தியா
2. இலங்கை
3. நேபாளம்
4. பூட்டான்
5. பாகிஸ்தான்
6. ஆப்கானிஸ்தான்
7. வாங்காளதேசம்
8. மாலத்தீவுகள்
6. வேறுபடுத்துக. உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக்கொள்கை.
விடைகுறிப்பு:
VI. விரிவான விடை தருக.
1. அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
விடைகுறிப்பு:
அணிசேரா இயக்கம்:
இச்சொல்லை 1953 ஐ.நா. உரையில் வி.கிருஷ்ணமேனன் உருவாக்கினார்
அணிசேராமை இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சம்
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரு வல்லரசுகளின் ஆதிக்கத்தை எதிர்த்து அணிசேரா இயக்கம் என்ற வழியை நேரு தேர்ந்தெடுத்தார்.
நோக்கம்:
ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரம் பராமரித்தல், பிரச்சனைகளை நாடுகள் சுதந்திரமாக தீர்மானித்தல்
120 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது
இது ஒரு அரசியல் இயக்கத்திருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் அடைந்துள்ளது
நிறுவனத் தலைவர்கள் மற்றும் நாடு:
1. நேரு - இந்தியா
2. நாசர் - எகிப்து
3. நுக்ருமா - கானா
4.சுகர்னோ - இந்தோனேசியா
5. டிட்டோ - யூகேஸ்லோவியா
2. வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளைப் பற்றி விவாதிக்கவும்
விடைகுறிப்பு:
இயற்கை வளம்
ராணுவ வலிமை
சர்வதேச சூழல்
பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
அரசியல் நிலைத்தன்மை, அரசாங்க அமைப்பு
நாட்டின் புவியில் அமைப்பு மற்றும் பரப்பளவு
நாட்டின் வரலாறு, பாரம்பரியம், தத்துவத்தின் அடிப்படை
அமைதிக்கான அவசியம் ஆயுதகுறைப்பு, பெருக்கத்தடை