Samacheer Kalvi Guide Tamil Nadu State Board Text Book Solutions, Important Questions and Answers for All standards

Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.1 Dravida mozhi kudumbam Book Back Solution

தமிழின் தனித்தன்மைகள்இயல் 1.1 – திராவிட மொழிக்குடும்பம்

Hello students! Welcome to our comprehensive guide for Samacheer Kalvi 9th Tamil Guide Chapter 1.1 ‘Dravida mozhi kudumbam’, you’ll find solutions to all the questions from the 9th Standard Tamil Book Lesson 1.1 திராவிட மொழிக்குடும்பம்


We have provided answers to one-mark to big mark questions and included additional ones for competitive exam preparation. You can also download the 9th Tamil Chapter 1.1 Dravida mozhi kudumbam Questions and Answers, Summary, Notes, and the Samacheer Kalvi 9th Tamil Guide PDF.


திராவிட மொழிக்குடும்பம் வினா விடைகள்

On this page, you will find the answers for the Lesson Dravida mozhi kudumbam, which is the first subject of class 9 Tamil. Additionally, you can also access additional questions related to the Dravida Mozhi Kudumbam Subject.


கற்பவை கற்றபின்

Question 1.உங்கள் பெயருக்கான விளக்கம் தெரியுமா? உங்கள் பெயரும் நண்பர் பெயரும் தனித்தமிழில் அமைந்துள்ளதா? கண்டறிக.

அன்பரசன் – அன்புக்கு அரசன்

புகழினியன் – புகழுக்கு இனியன்

அருள்செல்வி – அருள் நிறை செல்வி

மங்கையர்க்கரசி – மங்கையர்களில் அரசி

அருள்வளவன் – அருளுடை வளவன்


Question 2.பயன்பாட்டில் எவ்வாறெல்லாம் தமிழ் மொழியின் வேர்ச்சொற்கள் வடிவமாற்றம் பெறுகின்றன என்பது குறித்துக் கலந்துரையாடுக.

எ.கா:

செய் – செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த, செய்வீர், செய்கிறோம்.

வா – 

answer

✰ தமிழ் மொழியில் ஒரு சொல் விளைவதற்கு வேராக இருப்பது வேர்ச்சொல் எனப்படும்.

✰ ஒரு சொல், தோன்றுவதற்கு அடியாக இருப்பது அடிச்சொல் எனப்படும்.

✰ ஒரு சொல்லின் முதலாக அமைவது முதல் நிலை எனப்படும். அதனை இலக்கண நூலார் பகுதி என்று கூறுவர்.

எ.கா:

செய் – செய்தாள், செய்கிறாள், செய்வாள், செய்து, செய்த, செய்வீர், செய்கிறோம்.

வா – வந்தான், வருகிறான், வருவான், வந்து, வந்த, வருகிறோம், வருவோம்.


பாடநூல் வினாக்கள்


 குறு வினா

நீங்கள் பேசும் மொழி எந்த இந்திய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது?

நாங்கள் பேசும் மொழி தமிழ் மொழி. தமிழ் மொழி இந்திய மொழிக் குடும்பத்தில் திராவிட மொழிகள் வகையைச் சார்ந்தது.


சிறு வினா

திராவிடமொழிகளின் பிரிவுகள் யாவை? அவற்றுள் உங்களுக்குத் தெரிந்த மொழிகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

திராவிடமொழிகளின் பிரிவுகள்

  • தென்திராவிட மொழிகள்
  • நடுத் திராவிட மொழிகள்
  • வட திராவிட மொழிகள்

தமிழின் தனித்தன்மைகள்

  • தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உ டையது தமிழ் மொழியாகும்.
  • இலங்கை, மலேசியா , சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசபப்டும் பெருமையுடைது தமிழ்
  • பிற திராவிட மொழிகளை விட தனித்த  இலக்கண வளத்தை கொண்டு தனித்தியங்கும் ஆற்றல் உடையது தமிழ்
  • பிறமொழிகளின் தாக்கம் இல்லாத மொழி தமிழ் மொழியாகும்.

2. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

மூணு – மலையாளம்

மூரு – கன்னடம்

மூடு – தெலுங்கு

மூஜி – துளு

நெடு வினா

திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க.

✰ திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்கு தமிழே பெருந்துணையாக இருக்கிறது.

✰ “தமிழ்” என்ற சொல்லில் இருந்து “திராவிடா” என்ற சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார் தமிழ் – தமிழா – தமிலா – டிரமிலா – ட்ரமிலா – த்ராவிடா – திராவிடா என்று விளக்குகிறார்.

✰ பிரான்சிஸ் எல்லீஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஒரே இனம் என்றார்.

✰ ஹோக்கன், மாச்சுமல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்பார்.

✰ கால்டுவெல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றார்.

✰ சமஸ்கிருதத்திற்குள்ளும் திராவிட மொழிகள் செல்வாக்கு செலுத்தியது என்றார். 


கூடுதல் வினாக்கள்

பின்வரும் பகுதியில் “திராவிட மொழிக்குடும்பம்” பாடத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கூடுதல் வினாக்களை தொகுத்து கொடுத்துள்ளோம். இந்த வினாக்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் போட்டி தேர்வுகளுக்கு (TNPSC, TRB) படிப்பவர்களுக்கும் பயன்படும்.


பலவுள் தெரிக

1. இந்தியாவில் __________ மொழிகள் பேசப்படுகின்றன

1300க்கு மேற்பட்ட

1500க்கு மேற்பட்ட

1000க்கு மேற்பட்ட

1700க்கு மேற்பட்ட



2. இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்

கால்டுவெஸ்

வில்லியம் ஜோன்ஸ்

ச.அகத்தியலிங்கம்

மாக்ஸ்முல்லர்



3. உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று எனக்குறிப்பிடப்படும் அகழாய்வு

ஆதிச்சநல்லூர் அகழாய்வு

சிந்துவெளி அகழாய்வு

மொகஞ்சதாரோ – ஹரப்பா அகழாய்வு

ஹரப்பா அகழாய்வு



2. இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்

கால்டுவெஸ்

வில்லியம் ஜோன்ஸ்

ச.அகத்தியலிங்கம்

மாக்ஸ்முல்லர்



4. திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர்

குமரிலபட்டர்

ச.அகத்தியலிங்கம்

கால்டுவெஸ்

மாக்ஸ்முல்லர்



5. வடமொழியை ஆராய்ந்து தென்னிந்திய மொழிகள் என பெயரிட்டவர்

ச.அகத்தியலிங்கம்

கால்டுவெஸ்

வில்லியம் ஜோன்ஸ்

மாக்ஸ்முல்லர்



6. பணத்தாள்களில தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள்

மலேசியா, சிங்கப்பூர்

பர்மா, பிஜித்தீவு

கயானா, மடாஸ்கர்

மொரிசியஸ், இலங்கை



7. இந்திய மொழிகளின் குடும்ப வகைகள்

3

4

5

6



8. திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலின் ஆசிரியர்

ச.அகத்தியலிங்கம்

வில்லியம் ஜோன்ஸ்

கால்டுவெல்

மாக்ஸ்முல்லர்



9. திராவிட மொழிகளின் எண்ணிக்கை

29

26

27

28



10. நடுத் திராவிட மொழிக் குடும்பத்தில் பொருந்தாதது

கூயி

நாய்க்கி

தெலுங்கு

துளு



11. திராவிட மொழிகளில் பொருள்களின் தன்மையை ஒட்டிப்  _____________ அமைந்துள்ளது.

பால் பாகுபாடு

பொருள் பாகுபாடு

சொல் வேறுபாடு

மொழி வேறுபாடு



12. சங்க இலக்கியங்கள் காலவரை _________ ஆம் நூற்றாண்டு

பொ.ஆ.மு. 5 – பொ.ஆ. 2

பொ.ஆ.மு 5 – பொ.ஆ. 5

பொ.ஆ. 5 – பொ.ஆ. 8

பொ.ஆ. 8 – பொ.ஆ. 13



13. தொல்காப்பியம் காலவரை _________ ஆம் நூற்றாண்டு

பொ.ஆ.மு.3

பொ.ஆ. 3

பொ.ஆ.மு 1

பொ.ஆ. 1



14. மலையாள மொழியில் மிகப் பழமையான இலக்கிய நூல்

கவிராஜமார்க்கம்

சங்க இல்க்கியம்

பாரதம்

ராமசரிதம்



பொருத்துக

லீலா திலகம் – தமிழ்

ஆந்திர பாஷா பூஷனம் – கன்னடம்

தொல்காப்பியம் – தெலுங்கு

கவிராஜ மார்க்கம் – மலையாளம்

விடை : 1 – ஈ, 2 – இ, 3 – அ, 4 – ஆ


குறு வினா

1. எந்தெந்த நாடுகள் பணத்தாளில் தமிழ்மொழிகளை இடம் பெறச் செய்துள்ளன?

மொரிசியஸ், இலங்கை


2. திராவிட மொழிகளில் அண்மையில் சேர்க்கப்பட்ட மொழிகளை கூறுக

எருகலா, தங்கா, குறும்பா, சோழிகா


3. பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடும் தென்னிந்திய மொழிகளை கூறுக

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்


4. தென் திராவிட மொழிகளை எழுதுக

தமிழ், மலையாளம், கன்னடம், குடகு (கொடகு), துளு, கோத்தா, தோடா, கொரகா, இருளா


5. வட திராவிட மொழிகள் சிலவற்றை கூறுக

குரூக், மால்தாே, பிராகுய் (பிராகுயி)


6. திராவிட மொழிகளை கால்டுவெல்லுக்குப் பின்னர் ஆய்வு செய்தோர்கள் யார்?

ஸ்டென்கனோ, கே.வி.சுப்பையா, எல்.வி.இராமசுவாமி, பரோ, எமினோ, கமில், சுவலபில், ஆந்திரனோவ், தெ.பொ.மீனாட்சி சுந்தரம்


7. மொழிக்குடும்பங்களின் பிரிவுகளை எழுதுக

✰ இந்தோ – ஆசிய மொழிகள்

 ✰ ஆஸ்திரோ ஆசிய மொழிகள்

✰ திராவிட மொழிகள்

✰ சீன – திபெத்திய மொழிகள்


சிறுவினா

Question 1.தமிழின் தனித்தன்மைகள் யாவை?

✰ தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உடையது தமிழ்மொழி.

✰ இலங்கை, மலேசியா, பர்மா, சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற பல நாடுகளில் பேசப்படும் பெருமையுடையது தமிழ்மொழி.

✰ தனக்கெனத் தனித்த இலக்கண வளத்தைப் பெற்றுத் தனித்தியங்கும் மொழி.

✰ திராவிட மொழிகளில் பிறமொழித் தாக்கம் குறைந்து காணப்படும் மொழி தமிழ்.

✰ திராவிட மொழிகள் சிலவற்றின் தாய்மொழியாகத் திகழ்கிறது தமிழ்.

✰ ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்கள் அமைந்த சொல்வளமும் சொல்லாட்சியும் நிரம்பப் பெற்ற மொழி தமிழ்.

✰ இந்தியாவின் தொன்மையான கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழிலேயே அமைந்துள்ளன.

✰ பிற திராவிட மொழிகளைவிட ஒப்பியல் ஆய்வுக்குப் பெருந்துணை செய்வது தமிழ்.

Share: